டொவினோ தாமஸ்-கயாடு லோஹர் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இந்த படத்தினை இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனியின் இயக்குகிறார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் கடைசியாக "நரிவேட்டை" என்ற படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து டொவினோ தாமஸ் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனியின் இயக்கத்தில் நடித்து வருகிறார். டிஜோ ஜோஸ் ஆண்டனி இதற்கு முன்பு குயின், ஜன கண மன, மற்றும் மலையாளி பிரம் இந்தியா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
'பள்ளிச்சட்டம்பி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் "டிராகன்" படத்தின் மூலம் பிரபலமான நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் விஜயராகவன், தெலுங்கு நடிகர் சிவகுமார், சுதீர் கரமனா, ஜானி ஆண்டனி, டி.ஜி. ரவி, ஸ்ரீஜித் ரவி, பிரசாந்த் அலெக்சாண்டர், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.






