‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்திலிருந்து "ஜோடி பொருத்தம்" என்ற பாடல் வெளியானது

ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்திலிருந்து "ஜோடி பொருத்தம்" என்ற பாடல் வெளியானது
Published on

சென்னை,

ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஜோ பட ஜோடி மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் ஆண்பாவம் பொல்லாதது. இப்படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

கணவன் - மனைவி உறவை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் இதுவரை ரூ.5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் நாட்களில் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆண்பாவம் பொல்லாதது படத்திலிருந்து "ஜோடி பொருத்தம்" என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை லட்சுமிகாந்த் பாடியுள்ளார். பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com