'ரெட்ரோ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கண்ணாடி பூவே' பாடல் வெளியானது

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள 'ரெட்ரோ' படம் மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.
Published on

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கண்ணாடி பூவே' என்ற லிரிக்கல் பாடல் வெளியாகி உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்பாடலுக்கு விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணனே இப்பாடலை பாடியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com