சிம்பு பிறந்தநாளன்று புதிய வீடியோ வெளியிட்ட 'தக் லைப்' படக்குழு


The team of Thug Life released a new video on Simbu birthday
x

இன்று நடிகர் சிம்பு பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், 'தக் லைப்' படக்குழு புதிய வீடியோ வெளியிட்டுள்ளது.

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் திரிஷா ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படம் வரும் ஜூன் 5-ந் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இன்று நடிகர் சிம்பு தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், 'தக் லைப்' படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

1 More update

Next Story