ஜீவா நடித்துள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் டீசர் வெளியீடு


ஜீவா நடித்துள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் டீசர் வெளியீடு
x
தினத்தந்தி 17 Oct 2025 1:09 PM IST (Updated: 17 Oct 2025 1:30 PM IST)
t-max-icont-min-icon

"தலைவர் தம்பி தலைமையில்" படத்தை நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ளார்.

சென்னை,

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். கடைசியாக இவர் "அகத்தியா" படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தையடுத்து ஜீவா, பேலிமி படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் "தலைவர் தம்பி தலைமையில்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜீவாவுடன் தம்பி ராமையா, பிரார்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 'ராவண கோட்டம்' படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து, தற்போது ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story