’வருகிற தேர்தல் மிகவும் முக்கியம், அதுதான் ...’- ஜி.வி.பிரகாஷ்

மார்கழியில் மக்களிசை என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் நேற்று தொடங்கியது.
சென்னை,
இயக்குனர் பா.ரஞ்சித் தின் சை நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் நேற்று தொடங்கியது.
இதில் ஜி.வி.பிரகாஷ், வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பறை இசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில்,
’இசை எல்லோருக்கும் பொதுவானது. கடந்த 3 வருடங்களாக இந்த விழாவிற்கு வந்து கொண்டிருக்கிறேன். இந்நிகழ்ச்சியில் திறமையான பலர் நமக்கு கிடைப்பார்கள்.
அடுத்த ஆண்டு முக்கியமான ஆண்டு. வருகிற சட்டமன்ற தேர்தல் அடுத்த 15 ஆண்டுகள் எப்படி இருக்க போகிறது என்பதை தீர்மானிக்கும்’ என்றார்.
Related Tags :
Next Story






