இணையத்தில் வைரலாகும் "உயி அம்மா" பாடல் - நடிகை கொடுத்த ரியாக்சன்


The viral song “Uyi Amma” - Reaction from the actress
x

'ஆசாத்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ராஷா ததானி.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை ரவீனா தாண்டன். 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கே.ஜி.எப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் இவர் 'சாது', 'ஆளவந்தான்' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரது மகள் ராஷா ததானி.

இவர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி வெளியான 'ஆசாத்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், அதில் இடம் பெற்ற "உயி அம்மா" பாடல் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

இதில் ராஷா ததானி கவர்ச்சியாக நடனமாடி இருந்தார். சிறு வயதிலேயே இப்படி நடித்ததற்காக சிலர் அவரை விமர்சித்தாலும், மற்ற நட்சத்திர வாரிசுகளை விட அருமையாக நடித்திருந்ததாக பலரும் பாராட்டினர்.

இந்நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் "உயி அம்மா" பாடல் குறித்து ராஷா ததானி கூறுகையில், "இப்படி ஒரு ரியாக்சன் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.

1 More update

Next Story