ராஷ்மிகா மந்தனாவின் 'தி கேர்ள்பிரண்ட்' - முதல் பாடல் ரிலீஸ் எப்போது?


TheGirlfriend first single out on July 16th
x

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் ரவிந்திரன் இயக்கும் இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் இசையை மேற்கொள்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ''நதிவே'' என்ற பாடல் வருகிற 16-ம் தேதி வெளியாகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ராஷ்மிகா மந்தனா முன்னணி இடத்தில் இருப்பவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.

1 More update

Next Story