அப்போது என் அம்மா, இப்போது தர்மேந்திரா...மீம்ஸ்களால் ஜான்வி கபூர் வருத்தம்


Then my mother, now Dharmendra...Janhvi Kapoor upset by memes
x

தனது தாய் ஸ்ரீதேவியின் மரணத்தை பற்றி பேச கவனமாக இருப்பதாக ஜான்வி கபூர் கூறினார்.

சென்னை,

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பிரபலங்களின் மரணங்களை நகைச்சுவை மீம்ஸாக மாற்றும் போக்கு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் தனது தாய் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பேச ஒவ்வொரு முறையும் மிகவும் கவனமாக இருப்பதாக கூறினார். "என் தாயின் மரணத்தை பற்றி பேசி நான் விளம்பரம் பெற முயற்சிக்கிறேன் என்று மக்கள் நினைப்பார்கள் என்ற பயத்தில் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச நான் பலமுறை தயங்கி இருக்கிறேன். அந்த நேரத்தில் நான் அனுபவித்த வலி அளவிட முடியாதவை. அவற்றை வார்த்தைகளில் விவரிக்க முடியாது," என்று அவர் தனது கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும், பிரபலங்கள் இறந்தவுடன் அவர்களின் மரணங்களை மீம்ஸாக மாற்றும் போக்கு மிகவும் அபாகரமானது என்றும் அவர் கூறினார். ''தர்மேந்திரா இறந்தபோது கூட, பலர் பல வகையான செய்திகளை உருவாக்கினர். ஒருவரின் மரணத்தை மீம்ஸாக மாற்றுவது மிகவும் பரிதாபமான ஒன்று. இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது," என்று ஜான்வி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

1 More update

Next Story