’சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை’... ஆஷிகா ரங்கநாத்


’சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை’... ஆஷிகா ரங்கநாத்
x

ஆஷிகா தற்போது ரவி தேஜாவுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

நடிகை ஆஷிகா ரங்கநாத்துக்கு தெலுங்கில் மூத்த ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்பு வருகிறது. நா சாமி ரங்கா படத்தில் நாகார்ஜுனாவுடன் நடித்த இவர், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல், தற்போது ரவி தேஜாவுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். தற்போது, ​​ஆஷிகா அப்படத்தின் புரமோஷனில் முரமாக ஈடு பட்டுள்ளார். இந்த நிலையில், சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீனியர் ஹீரோக்களுடன் பணிபுரிவதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று ஆஷிகா தெரிவித்தார்.

ஆஷிகா தற்போது ரவி தேஜாவுடன் ’பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி’ படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கிஷோர் திருமலா இயக்கும் இப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story