'இப்போது எந்த நடுக்கமும் இல்லை' - நடிகர் விஷால்


There is no Trembling now - Actor Vishal
x
தினத்தந்தி 12 Jan 2025 9:09 AM IST (Updated: 12 Jan 2025 12:55 PM IST)
t-max-icont-min-icon

விஷால் சில தினங்களுக்கு முன்பு 'மதகஜராஜா' பட விழாவில் பங்கேற்றபோது மேடையில் கைகள் நடுங்கின.

சென்னை,

நடிகர் விஷால் சில தினங்களுக்கு முன்பு 'மதகஜராஜா' பட விழாவில் பங்கேற்றபோது மேடையில் கைகள் நடுங்கின. பேசவும் தடுமாறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விஷாலுக்கு என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இதையடுத்து விஷாலுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதற்காக டாக்டரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று 'மதகஜராஜா' படத்தின் சிறப்புக் காட்சியை விஷால் காண வந்தார். அப்போது அவர் பேசுகையில்,

' நிறைய பேர் இவர் 3 மாதம், 6 மாதம் படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்று கூறினர். இப்போது அந்தமாதிரி எந்த நடுக்கமும் இல்லை. மைக் சரியாகதான் இருக்கிறது. எல்லோரும் இந்த படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரொம்ப நன்றி. சாகும்வரை உங்கள் அன்பை நான் மறக்க மாட்டேன்' என்றார்.

1 More update

Next Story