’முத்தக் காட்சிகளில் நடிக்க வற்புறுத்தினர்...’- நடிகை சாந்தினி

கலர் போட்டோ திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை சாந்தினி சவுத்ரி.
சென்னை,
2020 ஆம் ஆண்டு வெளியான கலர் போட்டோ திரைப்படத்தில் சுஹாஸுக்கு ஜோடியாக நடித்து கவனம் பெற்றவர் நடிகை சாந்தினி சவுத்ரி. இந்நிலையில் , ஒரு நேர்காணலில் முத்தக் காட்சிகளில் நடிக்க வற்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
கதை சொன்னபோது, முத்தக் காட்சிகளைப் பற்றி தன்னிடம் சொல்லவில்லை எனவும், ஆனால் படப்பிடிப்பின் போது அதை சொன்னதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
இருப்பினும், படத்தின் பெயர் என்னவென்று அவர் சொல்லவில்லை. ஆனால், அது 'ஹவுரா பிரிட்ஜ்' என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகை சாந்தினி சவுத்ரியின் புதிய படம் அறிவிக்கப்பட்டது. இதில் அவர் நடிகர் சுஷாந்த் யாஷ்கிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை விகாஸ் இயக்குகிறார்.
Related Tags :
Next Story






