’என்னை விமர்சிக்க முழு உரிமையும் அவர்களுக்கு உண்டு’ - பிரித்விராஜ்

பிரித்விராஜ் தற்போது நடித்துள்ள படம் 'விலாயத் புத்தர்'
'They have every right to criticize me' - Prithviraj
Published on

சென்னை,

பார்வையாளர்களின் விமர்சிக்கும் உரிமை குறித்த பிரித்விராஜ் கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கொச்சியில் உள்ள லுலு மாலில் நடைபெற்ற தனது 'விலாயத் புத்தர்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில், தனது வாழ்க்கையை வடிவமைத்தது ரசிகர்கள்தான் என கூறினார்.

அவர் பேசுகையில், நீங்கள்தான் என்னை ஒரு நடிகனாக்கினீர்கள். எனவே என்னை விமர்சிக்க உங்களுக்கு உரிமை உண்டு. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பால் இங்கு வந்திருக்கிறீர்கள். என்னை வளர்த்தது மலையாள ரசிகர்கள்தான். என்னை விமர்சிக்கவோ, என் தவறுகளைச் சுட்டிக்காட்டவோ உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. அதை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வேன் என்றார்.

சந்தன மரக்கடத்தல்களை மையமாகக் கொண்டு பிரபல மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய விலாயத் புத்தா என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஜெயன் நம்பியார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 21-ம் தேதி திரைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com