''’அடுத்த தளபதி ஆகப் பார்க்கிறார்’னு கிண்டல் பண்ணாங்க''...- சிவகார்த்திகேயன்


They tease him by saying he is looking to become the next commander...- Sivakarthikeyan
x
தினத்தந்தி 25 Aug 2025 7:32 AM IST (Updated: 25 Aug 2025 7:35 AM IST)
t-max-icont-min-icon

மதராஸி'' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

சென்னை,

நேற்று நடைபெற்ற ''மதராஸி'' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இதற்கு இசை அமைக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், டிரெய்லர் மற்ரும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அனிருத், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில்,

''விஜய் சார் கூட நான் நடித்ததற்குப் பிறகு எல்லோருக்கும் சந்தோஷம். சிலர், இவர் அடுத்த தளபதி, குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார்னு கிண்டல் பண்ணாங்க. அவர் அப்படி நினைத்திருந்தால் துப்பாக்கியை என்னிடம் கொடுத்திருக்க மாட்டார், நானும் வாங்கியிருக்க மாட்டேன்.

நான் அவருடைய ரசிகர்களை பிடிக்கப் பார்க்கிறேன்னு சொன்னாங்க, ரசிகர்களை அப்படி யாராலும் பிடிக்க முடியாது. ரசிகர்கள் என்பது ஒரு பவர். அண்ணன் அண்ணன்தான் தம்பி தம்பிதான் '' என்றார்.

1 More update

Next Story