தமிழிலும் வசூலை குவிக்க வரும் மோகன்லாலின் 'தொடரும்'


Thodarum releases on May 9, all across Tamil Nadu!
x

மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 25-ம் தேதி மலையாளத்தில் வெளியான படம் ’தொடரும்’.

சென்னை,

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். எம்புரான் படத்தின் மாபெரும் வெற்றியையடுத்து இவரது நடிப்பில் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான படம் 'தொடரும்'.

தருண் மூர்த்தி இயக்கிய இப்படத்தில் ஷோபனா கதாநாயகியாக நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூலித்து தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் வசூலை குவிக்க 'தொடரும்' தயாராகி இருக்கிறது. அதன்படி, இப்படம் வருகிற 9-ம் தேதி தமிழில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story