யாஷை பாராட்டிய ஹாலிவுட் ஆக்சன் டைரக்டர்

"அவதார்", "எப்9" போன்ற ஹாலிவுட் படங்களில் ஆக்சன் டைரக்டராக பணிபுரிந்த ஜே.ஜே.பெர்ரி இப்படத்திலும் பணிபுரிந்திருக்கிறார்.
மும்பை,
நடிகர் யாஷ், தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'டாக்ஸிக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கர்நாடகாவின் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
"அவதார்" மற்றும் "எப்9" போன்ற ஹாலிவுட் படங்களில் ஆக்சன் டைரக்டராக பணிபுரிந்த ஜே.ஜே.பெர்ரி இப்படத்திலும் பணிபுரிந்திருக்கிறார். இந்நிலையில், இவர் நடிகர் யாஷை பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த பதிவில்,
'எனது நண்பர் யாஷுடன் 'டாக்ஸிக்' படத்தில் பணியாற்றிவது மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் செய்ததை நினைத்து பெருமைப்படுகிறோம். எல்லோரும் இதைப் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது. இது ஒரு 'பேங்கர்' என்று தெரிவித்திருக்கிறார்.