கியாரா அத்வானிக்காக படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய ''டாக்ஸிக்'' படக்குழு?

தற்போது கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானி ஏற்கனவே படத்தின் சில முக்கியமான காட்சிகளை முடித்துவிட்டார்.
மும்பை,
கியாராவின் வசதிக்காக படப்பிடிப்பு இடத்தை மாற்ற டாக்ஸிக் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானி ஏற்கனவே படத்தின் சில முக்கியமான காட்சிகளை முடித்துவிட்டார். தற்போது அவரை உள்ளடக்கிய கூடுதல் காட்சிகளை மும்பையில் படமாக்க குழு திட்டமிட்டுள்ளது.
முன்னதாக 'டாக்ஸிக்' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புக்காக பெங்களூருவில் பிரமாண்டமான செட்களை அமைக்க குழு திட்டமிட்டிருந்தது. சுமார் 60 நாட்களுக்கு அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், நடிகை கியாரா மும்பையில் வசித்து வருகிறார் என்பதால், அவரால் பெங்களூருக்கும் மும்பைக்கும் பயணம் செய்வது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் படக்குழு படப்பிடிப்பு இடத்தை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story






