விஜய் தேவரகொண்டா படத்தில் இணைந்த அஜித் பட ஒளிப்பதிவாளர்

இப்படத்திற்கு தற்காலிகமாக விடி14 என்று பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை,
இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா தனது 14-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக விடி14 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக கூறப்படுகிறது. 19 ம் நூற்றாண்டில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமான ஒரு சினிமாவாக, பிரம்மாண்டமான பான் இந்திய படைப்பாக இப்படம் உருவாகிறது.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இணைந்துள்ளார். இவர் தூம், தூம் 2, அஜித்தின் விடாமுயர்ச்சி மற்றும் வலிமை போன்ற திரைப்படங்களில் பணியாற்றியவர்.
Related Tags :
Next Story






