3-வது முறையாக இணைந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா...டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு


VD14 is titled Ranabaali: Vijay Deverakonda drags British officer in 1st look from film; Rashmika Mandanna to star too
x

இதில் 'மம்மி' பட நடிகர் அர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னை,

ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரணபலி' பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே 'கீதம் கோவிந்தம், டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 3-வது முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்துள்ளனர்.

‘டியர் காம்ரேட்’ படத்துக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் படமாக இது உருவாகிறது. இப்படம் செப்டம்பர் 11-ம் தேதி திரைக்கு வருகிறது. திருமண வதந்திகள் பரவி வரும்நிலையில், இருவரும் படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

1 More update

Next Story