"வேற லெவல் பா"... 'பன் பட்டர் ஜாம்' படத்தை பாராட்டிய விஜய்


வேற லெவல் பா... பன் பட்டர் ஜாம் படத்தை பாராட்டிய விஜய்
x
தினத்தந்தி 24 Jun 2025 9:30 PM IST (Updated: 24 Jun 2025 9:30 PM IST)
t-max-icont-min-icon

பிக் பாஸ் ராஜு நடித்துள்ள ‘பன் பட்டர் ஜாம்’ படம் ஜூலை 18ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் 'பன் பட்டர் ஜாம்'. பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராஜு ஜெகன் மோகன். இந்த படத்தின் மூலம் இவர் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை ரெயின் ஆப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாகி உள்ள இப்படம் ஜூலை 18-ம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில் இப்படத்தில் இருந்து ஸ்டெல்லர் என்ற கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதனை, நடிகரும் தவெக தலைவருமான விஜய் பார்த்து பாராட்டியுள்ளார். அதனை நடிகர் ராஜு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "வேற லெவல் பா.. தியேட்டருக்கு வந்து படம் பார்க்கனும்னு தோன்றுது" என தொலைபேசியில் விஜய் பாராட்டியதாக நடிகர் ராஜு பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story