மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா


மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா
x
தினத்தந்தி 10 Nov 2025 12:35 PM IST (Updated: 10 Nov 2025 2:47 PM IST)
t-max-icont-min-icon

உஜ்ஜைனில் உள்ள பிரசித்தி பெற்ற மகா காலேஸ்வரர் கோவிலில் நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளனர். இவர்கள் அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் உள்ள பிரசித்தி பெற்ற மகா காலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீலீலாவும் கலந்து கொண்டார்.

கோவிலில் இருந்த நந்தி சிலைக்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர். பின்னர், இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

1 More update

Next Story