'கிங்டம்' படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய விஜய் தேவரகொண்டா


Vijay Deverakonda begins dubbing for ‘Kingdom’
x
தினத்தந்தி 15 April 2025 8:19 PM IST (Updated: 15 April 2025 9:38 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'கிங்டம்' எனபொபெயரிடப்பட்டுள்ளது. கவுதம் தின்னனுரி இயக்கும் இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணியை விஜய் தேவரகொண்டா தொடங்கி இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படத்துடன், 'டப்பிங் பணி தொடங்கி முதல் பாதி நிறைவடைந்துள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story