தள்ளிப்போன விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' - புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு


Vijay Deverakonda’s Kingdom gets postponed – Makers announce new release date
x
தினத்தந்தி 14 May 2025 12:07 PM IST (Updated: 14 May 2025 1:11 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் வருகிற 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12-வது திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்திற்கு 'கிங்டம்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் தின்னனுரி இயக்கியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்படம் தள்ளிபோயுள்ளது. அதன்படி, 'கிங்டம்' படம் வருகிற 30-ம் தேதிக்கு பதில் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், படத்திற்கான புரொமோஷன், கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாது என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக படக்குழு அறிக்கை.

1 More update

Next Story