‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க மலேசியா புறப்பட்டார் நடிகர் விஜய்

‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் யாரும் அரசியல் பேச கூடாது என்றும் சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் மலேசிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த நிலையில், நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க நடிகர் விஜய் சென்னை விமானத்திற்கு வந்து தனி விமானம் மூலம் மலேசியா புறப்பட்டார்.
இந்த விழாவில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் ஏற்கனவே மலேசியா சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ ஆகியோரும் இந்த இசை வெளியீட் விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது






