விக்ரம் பிரபுவின் புதிய பட போஸ்டர் வெளியானது!


விக்ரம் பிரபுவின் புதிய பட போஸ்டர் வெளியானது!
x
தினத்தந்தி 12 Feb 2025 8:58 PM IST (Updated: 27 May 2025 6:03 PM IST)
t-max-icont-min-icon

அறிமுக இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

கடந்த 2012-ம் ஆண்டு பிரபு சாலமனின் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு . அந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, இவர் நடித்த படங்கள் அவருக்கு பெரியளவில் கை கொடுக்கவில்லை.

கடந்த 2022-ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான டாணாக்காரன் திரைப்படத்தை நடிகரும் இயக்குனருமான தமிழ் இயக்கியிருந்தார். நேரடியாக ஓ.டி.டியில் வெளியான இப்படம் விக்ரம் பிரபுவிற்கு "கம் பேக்" ஆகவே அமைந்தது. கடைசியாக 2023-ம் ஆண்டு யுவராஜ் தயாளன் இயக்கிய இறுகப்பற்று திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடித்திருந்தார்.

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' லவ் மேரேஜ் ' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு , கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' பட புகழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் கவனிக்க , தயாரிப்பு வடிவமைப்பை எம். முரளி மேற்கொண்டிருக்கிறார். கிராமிய பின்னணியில் பேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸ்யூர் பிலிம்ஸ் - ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'லவ் மேரேஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் கோடை காலத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story