ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்த விக்ரம் - துஷாரா விஜயன்

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படம் 2 நாள்களில் ரூ 10 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்த விக்ரம் - துஷாரா விஜயன்
Published on

மதுரை,

சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ 3.25 கோடிவசூலித்துள்ளது. இப்படம் 2 நாட்களில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதால் இப்படத்தின் வசூல் மேல் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விக்ரம் 'வீர தீர சூரன்' படத்தை விளம்ரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார். தமிழ்நாடு முழுக்க பல்வேறு திரையரங்குகளுக்கு சென்ற நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார். அந்த வரிசையில், தற்போது நடிகர் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை நேரில் கண்டு ரசித்தனர்.

'வீர தீர சூரன்' படத்தை விளம்பரப்படுத்தும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ரசிகர்கள் விக்ரம் மற்றும் துஷாரா விஜயனை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com