"லெவன்" பட இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷால்!

இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் அடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து புதிய படம் இயக்க உள்ளார்.
"லெவன்" பட இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷால்!
Published on

சென்னை,

இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் 'லெவன்'. இந்தபடத்தில் நடிகர் நவீன் சந்திரா, ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் திரையரங்குகளில் வரவேற்பு பெற்றது தொடர்ந்து ஓடிடியிலும் மாபெரும் வெற்றி பெற்றது.

இதற்கிடையில், இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ், அடுத்ததாக எந்த மாதிரியான படத்தை இயக்கவுள்ளார். யாரை இயக்கவுள்ளார் என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துவந்தன.

இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் அடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com