எப்போது மாறுவார்கள்?...பிக் பாஸ் மீது கோபத்தை வெளிப்படுத்திய சீரியல் நடிகை


When will they change.. Serial actress expresses anger at Bigg Boss
x

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ குறித்து பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்தார்.

சென்னை,

தெலுங்கு சீரியல் நடிகை அன்ஷு ரெட்டி பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ குறித்து பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்தார்.

பேருக்குத்தான் தெலுங்கு பிக்பாஸ் ஷோ.. ஆனால் தெலுங்கு சரியாகப் பேசத் தெரியாத தெலுங்கு அல்லாத நடிகர்களை சேர்க்கிறார்கள். ஏன் என்பது எனக்குப் புரியவில்லை. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெலுங்கு பேசுவதும் புரிந்துகொள்வதும் அடிப்படை அளவுகோலாகும். பிக் பாஸில் சேர விரும்பும் பல தெலுங்கு நடிகர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

மற்ற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது.. அங்கு எத்தனை தெலுங்கு நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது?. சீரியல்களிலும் திரைப்படங்களிலும் இதே நிலைதான். எப்போது மாறுவார்கள். என்று கேட்டு அன்ஷு ரெட்டி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

1 More update

Next Story