மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டது ஏன்? நடிகை ஷெர்லின் சோப்ரா


மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டது ஏன்? நடிகை ஷெர்லின் சோப்ரா
x

நடிகை ஷெர்லின் சோப்ரா, சில ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து மார்பகத்தை பெரிதாக்கினார்.

2005-ம் ஆண்டு வெளியான 'டைம் பாஸ்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. தொடர்ந்து ‘ரெட் ஸ்வாக்', 'வாணி' மற்றும் 'காம்சூத்ரா 3டி' போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். நடிகை ஷெர்லின் சோப்ரா, சில ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து மார்பகத்தை பெரிதாக்கினார். ஆரம்ப காலத்தில் இதனால், எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாத நிலையில், கடந்த சில மாதங்களாக முதுகு, கழுத்து, தோள் வலியால்அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து ஷெர்லின் சோப்ரா மார்பகத்தில் பொருத்தப்பட்டு இருந்த இம்ப்ளாண்டுகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளார். மார்பக அறுவை சிகிச்சை மூலம் 825 கிராம் எடை அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘வலிகள் அனைத்தும் நீங்கி, உடல்நலம் மிகவும் லேசாக இருப்பது போல உணர்கிறேன். இந்த பெரிய சுமை என் மார்பகத்தில் இருந்து இறக்கி விடப்பட்டு உள்ளது. அதன் எடை 825 கிராம். நான் ஒரு பட்டாம்பூச்சியை போல் லேசாக உணர்கிறேன். எந்த ஒரு சுமையானாலும் நாம் சுமையாக வாழக் கூடாது என நான் நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story