தீபாவளிக்கு திரைக்கு வருமா சூர்யா 45? - தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்


Will Suriya 45 hit the screens for Diwali? - Update given by the producer
x

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

சென்னை,

ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் 'சூர்யா 45' படப்பிடிப்பு இன்னும் 1 வாரத்தில் முடிய போவதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார்.மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய தாயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சூர்யா 45 அப்டேட் கொடுத்தார். அவர் கூறுகையில், 'சூர்யா 45' படப்பிடிப்பு இன்னும் 1 வாரத்தில் முடிய போகிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. ரிலீஸ் தேதியை சரியான நேரத்தில் அறிவிப்போம். பண்டிகை நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் தீபாவளிக்கு வர வாய்ப்பிருக்கிறதா? என்று கேட்டார், அதற்கு பதிலளித்த அவர், ' பண்டிகை நாளாக இருக்கும். அது பற்றிய அப்டேட் ஜூன் மாதம் 2 அல்லது 3-வது வாரத்தில் இருந்து வர ஆரம்பிக்கும்' என்றார்.

1 More update

Next Story