விரைவில் உருவாகும் ''வொண்டர் வுமன் 3''


Wonder Woman 3 Soon
x
தினத்தந்தி 16 Jun 2025 8:04 PM IST (Updated: 16 Jun 2025 8:21 PM IST)
t-max-icont-min-icon

ஜேம்ஸ் கன், வொண்டர் வுமன் படத்தின் 3-ம் பாகத்தை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

வாஷிங்டன்,

டிசி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது. டிசி ஸ்டுடியோஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் கன், வொண்டர் வுமன் படத்தின் 3-ம் பாகத்தை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு நேர்காணலில், அந்த படத்தின் வேலைகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.

டிசி காமிக்ஸின் 'வொண்டர் வுமன்' கதாபாத்திரம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. 2017 ஆம் ஆண்டு பேட்டி ஜென்கின்ஸ் இயக்கிய 'வொண்டர் வுமன்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது, உலகளவில் 822 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தில் நடிகை ஹால் ஹடொட் முக்கிய கதாப்பாத்திரமான வொண்டர் வுமனாக நடித்திருந்தார். தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக "வொண்டர் வுமன் 1984" படம் 2020-ம் ஆண்டு வெளியானது. இந்நிலையில், இதன் 3-ம் பாகம் விரைவில் வெளியாக இருப்பது டிசி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

1 More update

Next Story