யோகி பாபு கார் விபத்தில் சிக்கியதாக தகவல்

நடிகர் யோகி பாபு சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல் பரவி வருகிறது.
ராணிப்பேட்டை,
தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'பேபி&பேபி' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணி அளவில், நடிகர் யோகி பாபு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது.
இந்த விபத்தில் நடிகர் யோகி பாபு எந்த காயங்களும் இன்றி உயிர் தப்பியதாகவும், பின்னர் அந்த இடத்திற்கு வேறு காரை வரவழைத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் தகவல் பரவியது.
Related Tags :
Next Story






