விமான நிலையத்தில் பயணிகளுடன் வரிசையில் நின்ற நடிகர் விஜய்


விமான நிலையத்தில் பயணிகளுடன் வரிசையில் நின்ற நடிகர் விஜய்
x

வாரிசு படப்பிடிப்புக்கு செல்ல விமான நிலையத்தில் பயணிகளுடன் நடிகர் விஜய் வரிசையில் நின்றார்.

சென்னை

நடிகர் விஜய் தற்போது தனது 66-வது படத்தில் நடித்துவருகிறார். வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு 'வாரிசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது.

விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் வாரிசு படத்தில், பிரகாஷ் ராஜ் மற்றும் சரத்குமார் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, ஜெயசுதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையான வாரிசு, முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் மற்றும் நல்ல பாடல்கள் அடங்கிய பீல் குட் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 3 மாதங்களாக வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் செட்டில் நடந்து வந்த நிலையில், இன்று முதல் அதன் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இதற்காக விசாகப்பட்டினம் செல்ல விமானநிலையம் வந்த வந்த விஜய்யின் வீடியோவும், அவர் கியூ-வில் நிற்கும் படங்களும் டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
Next Story