'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் வம்சம், மவுனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, கழுவேத்தி மூர்க்கன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2015-ம் ஆண்டு அருள்நிதி, டிமான்ட்டி காலனி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து 'டிமான்ட்டி காலனி ' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'டிமான்ட்டி காலனி 2' படத்தில் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 15-ந் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்றாம் பாகத்திற்கான குறிப்போடு முடிவதால், அடுத்த பாகம் உருவாகும் எனத் தெரிகிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ரா திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தின் தோல்வி இயக்குநர் அஜய் ஞானமுத்து மீது பல்வேறு விமர்சனங்களுக்கு வழி வகுத்தது. தற்போது 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் வெற்றி அவர் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் விதமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் வருகின்ற 27ம் தேதி ஜி5 ஓ.டி.டி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com