திவ்யா தத்தாவின் முதல் தெலுங்கு வெப் தொடர்...எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

அரசியல் வெப் தொடரான ''மாயசபா'' மூலம் திவ்யா தத்தா தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை திவ்யா தத்தா. பஞ்சாபை சேர்ந்த இவர் ஏராளமான பஞ்சாபி படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
'பாக் மில்கா பாக்,' 'டெல்லி-6', 'வீர் ஜாரா,' போன்ற படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இந்நிலையில், தேவா கட்டா இயக்கத்தில் அதிகம் பேசப்பட்ட அரசியல் வெப் தொடரான ''மாயசபா'' மூலம் திவ்யா தத்தா தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார்.
இதில் அவர் ஒரு அரசியல்வாதியாக நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த தொடர் சோனி லிவ் தளத்தில் ஸ்டிரீமிங் ஆகிறது.
Related Tags :
Next Story






