ஓ.டி.டி.யில் வெளியாகும் பகத் பாசிலின் ஆக்சன் படம்

பகத் பாசில் நடித்துள்ள 'பொகெயின்வில்லா' திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
ஓ.டி.டி.யில் வெளியாகும் பகத் பாசிலின் ஆக்சன் படம்
Published on

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். மலையாள திரையுலகம் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனது நடிப்பு ஆற்றல் மூலம் அசத்தியுள்ளார் குறிப்பாக காமெடி காட்சிகளில் கலக்கியுள்ளார் பகத் பாசில். தற்போது அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் மலையாளத்தில் பகத் பாசில் 'பொகெயின்வில்லா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை பகத் பாசிலின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே பகத் பாசிலை வைத்து 'இயோப்பிண்டே புத்தகம், வரதன்' போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

அதிரடி ஆக்சன் நிறைந்த கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 'பொகெயின்வில்லா' திரைப்படம் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com