இன்வின்சிபிள் சீசன் 4 : அனிமேஷன் வெப் தொடரை எப்போது, ​​எங்கே பார்க்கலாம்?


Invincible Season 4 OTT release in India: When and where to watch animated series.
x

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வெப்தொடர் விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ளது.

சென்னை,

இன்வின்சிபிள் ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. இன்வின்சிபிள் சீசன் 4 இன் டீஸர் வெளியாகி உள்ளது. இது அனிமேஷன் சூப்பர் ஹீரோ வெப் தொடரின் அடுத்த சாப்டரில் என்ன வரப்போகிறது என்பது குறித்த ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது.

இந்த சின்ன கிளிப்பில், மார்க் கிரேசன் தனது காதலியுடன் பர்கர் மார்ட்டில் அமர்ந்து, முந்தைய சீசனின் நிகழ்வுகளைப் பற்றி சிந்திப்பதைக் காட்டுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வெப்தொடர் விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ளது. அதன்படி, இது பிரைம் வீடியோவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை தூண்டியுள்ளது.

1 More update

Next Story