முகேன் ராவ் நடித்துள்ள 'ஜின்-தி பெட்' படம்... ஓ.டி.டி.யில் வெளியாவது எப்போது?

டி.ஆர்.பாலா தயாரித்து இயக்கியுள்ள 'ஜின்-தி பெட்' படம் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
முகேன் ராவ் நடித்துள்ள 'ஜின்-தி பெட்' படம்... ஓ.டி.டி.யில் வெளியாவது எப்போது?
Published on

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் முகேன் ராவ். இவர் 'வேலன்' என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் தற்போது டி.ஆர்.பாலா தயாரித்து இயக்கும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'ஜின்- தி பெட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் முகேன் ராவ் மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் பால சரவணன், இமான் அண்ணாச்சி, விஜய் ஜார்ஜ், வடிவுக்கரசி, வினோதினி, நந்து ஆனந்த், ரித்விக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அர்ஜுன்ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைக்கிறார். தீபக் படத்தொகுப்பு செய்கிறார்.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் மலேசியாவை பின்னணியாகக் கொண்டு திகில், ஆக்சன், நகைச்சுவை, காதல் உள்ளிட்ட உணர்வுகள் கலந்த படமாக இப்படம் கடந்த மே 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. பேயை வைத்து பொழுதுபோக்கு அம்சத்தை வலுவாக கொடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார் டி.ஆர்.பாலா. திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. அதன்படி, வருகிற 20-ந் தேதி சன் நெக்ஸ்ட் என்று ஓ.டி.டி தளத்தில் 'ஜின் தி பெட்' படம் வெளியாக உள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com