'பறந்து போ' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

மிர்ச்சி சிவா நடித்துள்ள பறந்து போ படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
'பறந்து போ' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

"கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . இவரது இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் 'பறந்து போ'. மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் இந்தாண்டு வெளியான சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்று எனப் பாராட்டுகளையும் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 5ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com