இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் '23' திரைப்படம்


OTT: Telugu crime drama ‘23’ movie is now streaming on two platforms
x
தினத்தந்தி 27 Jun 2025 8:19 AM IST (Updated: 27 Jun 2025 12:43 PM IST)
t-max-icont-min-icon

கிரைம் படமான ''23'' கடந்த மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சென்னை,

''மல்லேஷம்'' மற்றும் ''8 ஏ.எம் மெட்ரோ'' படங்களை இயக்கிய ராஜ் ஆர் இயக்கி இருக்கும் கிரைம் படமான ''23'' கடந்த மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சராசரிக்கும் குறைவான விமர்சனங்களையே இப்படம் பெற்றது.

தேஜா மற்றும் தன்மாய் குஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படம், நிஜ வாழ்க்கை துயரங்களையும் சாதி அடிப்படையிலான அநீதிகளையும் பிரதிபலிக்கும் துணிச்சலான முயற்சிக்காக கவனத்தை ஈர்த்தது.

இந்த திரைப்படம் இன்று அமேசான் பிரைம் மற்றும் இடிவி வின் ஆகிய 2 ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கிறது. ஸ்டுடியோ 99 தயாரித்த இந்த படத்தில் பிரபல குணச்சித்திர நடிகர்களான ஜான்சி, பாவோன் ரமேஷ், தாகுபோத்து ரமேஷ் மற்றும் பிரணீத் ஆகியோரும் நடித்துள்ளனர்.

1 More update

Next Story