இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியான தமிழ் படங்கள்!


இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியான  தமிழ் படங்கள்!
x
தினத்தந்தி 20 July 2024 9:14 PM IST (Updated: 21 July 2024 4:25 PM IST)
t-max-icont-min-icon

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகியுள்ளன என்பதைக் காணலாம்.

சென்னை,

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்க்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர்.அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன என்பதைக் காணலாம்.

நடிகர் பிரிதிவிராஜ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் வெளியான படம் ஆடு ஜீவிதம். நடிகை அமலாபால் கதாநாயகியாக நடித்த இந்த படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மலையாள நாவலான பென்யாமின் எழுதிய அடு ஜீவிதம் நாவலைக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜுலை 19-ம் வெளியானது.

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கிய 'காடுவெட்டி' படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் கடந்த 16-ந் தேதி வெளியாகி உள்ளது.

நாசர், ஜெயக்குமார் நடித்த வித்தியாசமான திரில்லர் திரைப்படமான 'தி அக்காலி' ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் கடந்த 19-ந் தேதி வெளியாகி உள்ளது.

நீட் தேர்வை மையமாககொண்டு விதார்த், வாணி போஜன் நடிப்பில் வெளியான அஞ்சாமை திரைப்படம் சிம்பிளி செளத் தளத்தில் வெளியாகியுள்ளது.

விதார்த்தின் நடிப்பில் வெளியான லாந்தர் திரைப்படம் சிம்பிளி செளத் ஓடிடியில் வெளியாகியுள்ளது.


Next Story