காமன்வெல்த்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - பாரா டேபிள் டென்னிசில் வெண்கலம் வென்றார் சோனல்பென் படேல்


காமன்வெல்த்:  இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - பாரா டேபிள் டென்னிசில் வெண்கலம் வென்றார் சோனல்பென் படேல்
x

Image Courtesy: ANI 

தினத்தந்தி 6 Aug 2022 8:11 PM GMT (Updated: 6 Aug 2022 8:21 PM GMT)

பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சோனல்பென் படேல் வெண்கலப்பதக்கம் வென்றார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 12 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சோனல்பென் படேல் இங்கிலாந்தின் சூ பெய்லியை எதிர் கொண்டார். இப்போட்டியில் சோனல்பென் படேல் 3-5 என்ற கணக்கில் இங்கிலாந்தின் சூ பெய்லியை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா 12 தங்கம், 11 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 38 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.


Next Story