காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டி : கலப்பு அணி பிரிவில் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்


காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டி : கலப்பு அணி பிரிவில் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image Courtesy : AP 

தினத்தந்தி 31 July 2022 10:49 AM IST (Updated: 31 July 2022 10:58 AM IST)
t-max-icont-min-icon

இன்று நடக்கும் காலிறுதி போட்டியில் இந்திய அணி -தென்ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

இதில் பேட்மிண்டன் தொடக்க ஆட்டத்தில் கலப்பு அணி பிரிவில் இந்தியா 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது..

2வது ஆட்டத்தில் இலங்கை அணியை 5-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

3வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்தியா.இதனால் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.இந்த நிலையில் இன்று நடக்கும் காலிறுதி போட்டியில் இந்திய அணி -தென்ஆப்பிரிக்காவை அணியுடன் மோதுகிறது.இந்த போட்டி இன்று மாலை 5.30 மணிக்குதொடங்குகிறது .

1 More update

Next Story