காமன்வெல்த் குத்துச்சண்டை: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிது கங்காஸ்..!


காமன்வெல்த் குத்துச்சண்டை: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிது கங்காஸ்..!
x

image courtesy: SAI Media twitter

தினத்தந்தி 7 Aug 2022 11:02 AM GMT (Updated: 7 Aug 2022 11:07 AM GMT)

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் தங்கம் வென்றார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

10-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் இங்கிலாந்து வீராங்கனை டெமி-ஜேட் ரெஸ்டனுடன் மோதினார்.

இந்த போட்டியில் நிது கங்காஸ் 5-0 என்ற கணக்கில் டெமி-ஜேட் ரெஸ்டனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். தற்போது இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.


Next Story