காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டி : இந்தியாவின் ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்


காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டி : இந்தியாவின் ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image Courtesy : AFP

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் (ரவுண்டு ஆப் 32) இந்தியாவின் முன்னணி வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உகாண்டாவை சேர்ந்த டேனியல் வனாகலியா உடன் மோதினார்.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் இந்த போட்டியில் 21-9, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


Next Story