காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் 4-வது நாள் போட்டி அட்டவணை, நேரம் - முழு விவரம்


காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் 4-வது நாள் போட்டி அட்டவணை, நேரம் - முழு விவரம்
x
தினத்தந்தி 1 Aug 2022 9:00 AM GMT (Updated: 1 Aug 2022 9:04 AM GMT)

4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில் 4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 4-வது நாள் இந்திய அணியின் போட்டி அட்டவணை பின்வருமாறு :

★ ஜூடோ: (பிற்பகல் 2:30 மணி முதல்)

ஆண்களுக்கான 66 கிலோ ரவுண்ட் ஆஃப் 16: ஜஸ்லீன் சிங் சைனி

பெண்களுக்கான 57 கிலோ ரவுண்ட் ஆஃப் 16: சுசிகா தாரியல்

ஆண்களுக்கான 60 கிலோ ரவுண்ட் ஆஃப் 16: விஜய் குமார் யாதவ்

பெண்களுக்கான 48 கிலோ காலிறுதி: சுஷிலா தேவி லிக்மாபம்

★ ஸ்குவாஷ்:

பெண்கள் ஒற்றையர் பிளேட்டர் காலிறுதி: சுனைனா சாரா குருவில்லா (மாலை 4:30)

பெண்கள் ஒற்றையர் காலிறுதி: ஜோஷ்னா சின்னப்பா (மாலை 6:00 மணி)

★ நீச்சல்:

ஆண்களுக்கான 100மீ பட்டர்பிளை : சஜன் பிரகாஷ் (பிற்பகல் 3:51)

குத்துச்சண்டை:

48-51 கிலோ பிரிவு (ஃப்ளைவெயிட்) 16 சுற்று: அமித் பங்கல் (மாலை 4:45)

54-57 கிலோ பிரிவு (ஃபெதர் வெயிட்) 16 சுற்று: ஹுஸாம் உதீன் முகமது (மாலை 6:00 மணி)

75-80 கிலோ பிரிவு (லைட் ஹெவிவெயிட்) 16 சுற்று: ஆஷிஷ் குமார் (காலை 1:00 மணி)

★ சைக்கிள் ஓட்டுதல்:

பெண்கள் கெய்ரன் 1வது சுற்று: திரியாஷி பால், சுஷிகலா ஆகாஷே மற்றும் மயூரி லூட் (மாலை 6:32 மணி )

ஆண்களுக்கான 40 கிமீ புள்ளிகள் பந்தயத் தகுதி: நமன் கபில், வெங்கப்பா கெங்கலாகுட்டி, தினேஷ் குமார் மற்றும் விஷவ்ஜீத் சிங் (மாலை 6:52 மணி)

★ ஹாக்கி:

ஆண்கள் : இந்தியா vs இங்கிலாந்து (இரவு 8:30)

★ பளு தூக்குதல்:

ஆண்கள் 81 கிலோ: அஜய் சிங் (பிற்பகல் 2:00)

பெண்கள் 71 கிலோ: ஹர்ஜிந்தர் சிங் (இரவு 11:00 மணி)

★ டேபிள் டென்னிஸ்:

ஆண்கள் அணி அரையிறுதி: இந்தியா vs நைஜீரியா (இரவு 11:30)


Next Story