காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸ் போட்டி : பதக்கத்தை உறுதி செய்தார் பவினா பட்டேல்


காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸ் போட்டி : பதக்கத்தை உறுதி செய்தார் பவினா பட்டேல்
x

Image Tweeted By @Media_SAI

தினத்தந்தி 5 Aug 2022 10:33 AM GMT (Updated: 5 Aug 2022 12:38 PM GMT)

பவினா பட்டேல் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த நிலையில் 8-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தின் சூ பெய்லியை இன்று எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பவினா பட்டேல் 11-6, 11-6, 11-6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

முன்னதாக நடைபெற்ற காலிறுதி போட்டியில் பவினா பட்டேல் 11-1, 11-5, 11-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story