காமன்வெல்த் ஆடவர் ஆக்கி: வெள்ளி பதக்கம் வென்றது இந்திய அணி

Image Tweeted By @Media_SAI
இறுதி போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28 ஆம் தேதி மிக பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இந்த தொடர் நாளை நிறைவு விழாவுடன் முடிவடைகிறது.
இன்று பேட்மிண்டன் போட்டியில் 3 தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதை தவிர இந்தியா 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்த நிலையில் இந்திய ஆடவர் ஆக்கி அணி தங்கப் பதக்கத்துக்கான இறுதி போட்டியில் இன்று விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய அணி வெள்ளி பதக்கத்துடன் ஆறுதல் அடைந்துள்ளது. இதனால் இந்திய அணியின் பதக்க எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.