காமன்வெல்த் போட்டி - ஒரே நாளில் 5 பதக்கங்களை குவித்த இந்தியா..! பதக்கப் பட்டியலில் 7-ம் இடத்தில் நீடிக்கிறது


காமன்வெல்த் போட்டி  -  ஒரே நாளில் 5 பதக்கங்களை  குவித்த இந்தியா..! பதக்கப் பட்டியலில் 7-ம் இடத்தில் நீடிக்கிறது
x

Image Courtesy : India All Sports Twitter 

இந்தியா நேற்று 1 வெள்ளி , 4 வெண்கலம் வென்றது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதில் இந்தியா நேற்று 1 வெள்ளி , 4 வெண்கலம் வென்றது.

*ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

*ஆண்களுக்கான பளுதூக்குதலின் (109 கிலோ) இறுதி போட்டியில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் இப்போட்டியில் மொத்தம் 355 கிலோ தூக்கி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

*ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோசல், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

*ஆண்களுக்கான ( 109+ கிலோ) பளுதூக்குதலில் இறுதி போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் பங்கேற்றார். அவர் இந்தப் போட்டியில் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

* ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை கைபற்றினார்.நேற்று 1 வெள்ளி , 4 வெண்கலம் வென்றது.காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 18 பதக்கங்களுடன் 7-ம் இடத்தில் நீடிக்கிறது.


Next Story