காமன்வெல்த் போட்டி: ஆஸ்திரேலியாவிற்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி


காமன்வெல்த் போட்டி: ஆஸ்திரேலியாவிற்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி
x

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.

இதில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியா அணியுடன் மோதி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் விளையாடியது. தொடக்க வீராங்கணைகளாக மந்தனாவும், ஷபாலி வர்மாவும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். மந்தனா 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிறப்பான விளையாடிய ஷபாலி வர்மா 48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். யாஷிகா பாட்யா 8 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், கடைசிகட்டத்தில் இந்திய அணி ரன்குவிக்கமுடியமல் தவித்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

1 More update

Next Story